9:37 முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரையே அதிகப்படுத்துகிறது. இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அதை ஆகுமாக்குகின்றனர். மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் தீச்செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.
PANAIKULAM ISLAMIC ASSOCIATION
Friday, January 28, 2011
நீதி செலுத்துங்கள்
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் – நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.
(ஆல்குர்ஆன் 16:90)
(ஆல்குர்ஆன் 16:90)
இன்றைய திருமணமும் இஸ்லாமிய திருமணமும்
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ إِذَا أَنتُم بَشَرٌ تَنتَشِرُونَ ﴿٢٠﴾ وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். (20) இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (21) ( Ar-Rum:20,21)
இஸ்லாமிய மணமகள்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1.அவளுடைய செல்வத்திற்காக
2.அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3.அவளுடைய அழகிற்காக
4.அவளுடைய மார்க்க (நல்லொழுக்க) த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து)வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! அறிவிப்பளர் : அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி 5090
இஸ்லாமிய மணமகன்
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் மணிவந்து, ‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்” என்று கூறிவிட்டு, நீண்டநேரம் நின்றிருந்தார். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘தங்களுக்கு இவள் அவசியமில்லையானால், இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘இவளுக்கு மஹ்ராகக் கொடுக்க உன்னிடம் ஏதேனும் உள்ளதா?’ என்று கேட்டார்கள். அவர், ‘என்னுடைய வேட்டியைத் தவிர என்னிடம் வேறொன்றுமில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அவளுக்கு நீர் இதைக் கொடுத்து விட்டால், வேட்டியில்லாமல் நீர் உட்கார்ந்து கொள்ள வேண்டியது தான். எனவே, (இவளுக்கு மஹ்ர் செலுத்த) ஏதேனும் தேடுக!” என்றார்கள். ‘அவர் (தேடிவிட்டு வந்து) ‘ஒன்றும் கிடைக்கவில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இரும்பினாலான ஒருமோதிரத்தையாவது தேடுக” என்று கூறினார்கள். அப்போதும அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘குர்ஆனில் ஏதேனும் உம்முடன் (மனனமாக) உள்ளதா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், ‘ஆம் இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம்” எனச் சில அத்தியாயங்களின் பெயரைக் குறிப்பிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உம்முடன் (மனனமாய்) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துத்தந்தேன்” என்று கூறினார்கள். அறிவிப்பளர் :ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) நூல்: புகாரி 5153, 5155, 5167. முஸ்லிம் 2788
கிரகணத்தொழுகை
75. ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)
சந்திரனும் ஒளியும் மங்கி- சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும். அல்குர்ஆன் 75:8,9
சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமநாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே மஸ்ஜிதுக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) ‘இந்த அத்தாட்சிகள் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூறவும் பிரார்த்திக்கவும் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்’ என்று கூறினார்கள். நூல்:புஹாரி (1059)
“சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எவருடைய மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. மாறாக அதன் மூலம் அல்லாஹ் தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்’. நூல்:புஹாரி (1048)
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு மஸ்ஜிதுக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு ‘ எவருடைய மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:புஹாரி (1040)
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. நூல்:புஹாரி (1045)

மார்க்கம்/தீன்
1, நம்முடைய தூதர் உங்களுக்குக் ஏவியதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எதை விட்டு அவர் உங்களைத் தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்.
அல்குர் ஆன் 59:7
அல்குர் ஆன் 59:7
குர்ஆன் ஓதுதல் / புரிந்து படித்தல்
1. குர்ஆனை ஓதிய தோழர் மறுமை நாளில் வருவார் அப்போது குர்ஆன் ‘இறைவா! இவருக்கு ஆடையை அணிவி’ என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் ‘இறைவா! இவருக்கு அதிகப்படுத்துவாயாக! என்று சொல்லும். அப்போது அவருக்கு உயர்ந்த ஆடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக்கொள்வான். அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக அவர் ஓதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி)
நூல்:திர்மிதி நூல்:இப்னுகுஸைமா
2. மறுமை நாளில் (குர்ஆனை படித்து அதனடிப்படையில் நடந்த)வரிடம் குர்ஆனிய தோழர் ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பீரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும். என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி)
நூல்:அபூதாவுத் நூல்:திர்மிதி.
3.எவருடைய உள்ளத்தில் குர்ஆனைப்பற்றிய அறிவு (வசனங்கள்) சிறிதளவேனும் இல்லையெனில் அது பாழடைந்த வீட்டைப்போல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்:திர்மிதி நூல்:தாரமி
விசுவாசி/முஃமீன்
‘செய்யாததைப் பிறருக்குச் சொல்கின்ற, ஏவப்படாதவைகளைச் செய்யக் கூடிய கூட்டத்தினர் தோன்றுவார்கள். தனது கரத்தால் அவர்களுக்கு எதிராகப் போராடுபவன் மூமினாவான். தனது உள்ளத்தால் அவர்களுக்கு எதிராக போராடுபவன் மூமினாவான். தனது நாவால் அவர்களை எதிர்த்துப் போராடுபவன் மூமினாவான். இதற்கு அப்பால் இருப்பது ஈமானில் கடுகளவையும் சேர்ந்ததல்ல’ என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது(ரழி) நூல்:முஸ்லிம்
Subscribe to:
Posts (Atom)